தி. க தலைவர் வீரமணிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து..
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு கி. வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் உடனிருந்தனர்.
Tags :