தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 24. 50 லட்சம் மோசடி.

மதுரை கே. கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் மனு கொடுத்தார்.எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம், தங்கவேல் நகரைச் சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், அய்யர்பங்களா, சக்தி நகரைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி வைடூரியம் ஆகிய 2 பேரும் காசாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.அப்போது அவர்கள் போலி ஆவணம் தயாரித்து ரூ. 24. 50 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதன்அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கம்மாள், வைடூரியம் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :