மாநிலங்களவை எம்.பியானார் சோனியாகாந்தி

by Staff / 20-02-2024 04:54:01pm
மாநிலங்களவை எம்.பியானார் சோனியாகாந்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் பேரவை செயலர் அறிவித்துள்ளார். 5 முறை மக்களவை தேர்தலில் வென்ற சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் மக்களவை தொகுதி எம்.பி.யாக சோனியாகாந்தி இருந்து வருகிறார்.

 

Tags :

Share via