தீ பிடித்து எரிந்த சாமி சிலை.. அணைக்க முயன்றவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய புளியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலை தீப்பிடித்த போது தீயை அணைக்க முற்பட்ட விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :