இன்றைய- ராசி பலன்கள்- (20-03-2023)

by Admin / 20-03-2023 07:09:07am
இன்றைய- ராசி பலன்கள்- (20-03-2023)

 

மேஷம்

மார்ச் 20, 2023

 

 

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சமூக பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான சிந்தனைகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். விரயங்கள் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

 

 

அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும். 

 

பரணி : இன்னல்கள் குறையும். 

 

கிருத்திகை : புத்திக்கூர்மை வெளிப்படும். 

---------------------------------------

 

 

ரிஷபம்

மார்ச் 20, 2023

 

 

பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் ஏற்பட்ட சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். வெற்றி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

 

 

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும். 

 

ரோகிணி : முன்னேற்றமான நாள்.

 

மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.

---------------------------------------

 

 

மிதுனம்

மார்ச் 20, 2023

 

 

சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். தனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். இன்னல்கள் குறையும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

 

 

 

மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும். 

 

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------

 

 

கடகம்

மார்ச் 20, 2023

 

 

எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் அலைச்சலும், புதிய அனுபவமும் ஏற்படும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். சிக்கல்கள் உண்டாகும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

 

புனர்பூசம் : அனுபவம் ஏற்படும். 

 

பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.

 

ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------

 

 

சிம்மம்

மார்ச் 20, 2023

 

 

மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 

 

 

 

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

 

பூரம் : முன்னேற்றமான நாள்.

 

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------

 

 

கன்னி

மார்ச் 20, 2023

 

 

நெருக்கமானவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். கவலைகள் விலகும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

 

 

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

அஸ்தம் : நெருக்கடியான நாள்.

 

சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------

 

 

துலாம்

மார்ச் 20, 2023

 

 

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அறிவியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தெளிவு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

 

 

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

 

சுவாதி : லாபம் உண்டாகும்.

 

விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------

 

 

விருச்சிகம்

மார்ச் 20, 2023

 

 

சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டில் மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு உயர்நிலை கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 

 

 

 

விசாகம் : குழப்பம் நீங்கும். 

 

அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும். 

 

கேட்டை : மேன்மை ஏற்படும். 

---------------------------------------

 

 

தனுசு

மார்ச் 20, 2023

 

 

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

 

 

மூலம் : முன்னேற்றம் ஏற்படும். 

 

பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.

 

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

 

 

மகரம்

மார்ச் 20, 2023

 

 

நெருக்கமான உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் வழியில் தனவரவிற்கான வாய்ப்புகள் ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 

 

 

 

உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

 

திருவோணம் : இலக்குகள் பிறக்கும்.

 

அவிட்டம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------

 

 

கும்பம்

மார்ச் 20, 2023

 

 

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 

 

 

 

அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும். 

 

சதயம் : விவேகத்துடன் செயல்படவும்.

 

பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------

 

 

மீனம்

மார்ச் 20, 2023

 

 

குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பயணங்களால் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மறைமுகமாக இருந்த சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

 

பூரட்டாதி : புரிதல் மேம்படும்.

 

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

 

ரேவதி : அனுசரித்து செல்லவும்

 

Tags :

Share via