மூணாறில் வைத்து மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது.

by Editor / 13-04-2025 09:38:45am
மூணாறில் வைத்து மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவந்த நிலையில் கேரளா மாநிலம் மூணாறில் வைத்து நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கோவையில் அவரது இல்லத்தில் 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை செய்ததாக மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

Share via