இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டெலிவரி பாய்

by Staff / 30-10-2023 11:39:39am
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டெலிவரி பாய்

உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி அன்று ஒரு பெண் மொபைல் செயலியில் மளிகைப் பொருட்களை முன்பதிவு செய்துள்ளார். 23 வயதான சுமித் சிங் பொருட்களை டெலிவரி செய்ய வந்தார். அப்போது அப்பெண் தனியாக இருப்பதை அறிந்த சுமித் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றவாளியை கைது செய்ய போலீசார் சென்றபோது, ​​போலீஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறித்துக்கொண்டு சுமித் தப்பியோடினார். இறுதியில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo