பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்.

by Staff / 30-10-2023 12:02:55pm
 பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்.

நாகர்கோவில் மேலராமன்புதூர் தட்டான்விளையை சேர்ந்த வர்சிவா (வயது 37), தொழிலாளி. இவருடைய மனைவி கலா சாந்தி (35). சிவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனை அவருடைய மனைவி கண்டித்து வந்தார். ஆனாலும் மது குடிக்கும் பழக்கத்தை சிவா கைவிடவில்லை. இதனால் கலா சாந்தி கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றார். பின்னர் சிவா கடந்த 1 வருடமாக பீச்ரோடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். மேலும் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தை தாங்க முடியாமல் அடிக்கடி தனது நண்பர்களிடம் புலம்பி வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் சிவாவின் உடல் தொங்கி கொண்டிருந்தது. மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories