பிறந்த நாளே இறந்த நாளான சோகம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேரிட்டு தனது பிறந்தநாளை பூங்கொடிக்கிராமத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார். அதன் பின்னே அருகில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சக்தி பிரகாஷ் கிணற்றில் மூழ்கியுள்ளார். நீண்ட நேரமாக அவரை தேடியும் கிடைக்காமல்.நண்பர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணையினர் தேடியதில் அவர் இறந்த நிலையில் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags :



















