ஆண்டிபட்டியில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பலி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரங்கசமுத்திரம் மெயின் ரோடு சாலையில் குடியிருந்து வரும் கிருஷ்ணன் பிரியா தம்பதியினரின் மகன் நவீன் 14 வயது என்பவர் வீட்டின் மேல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்கு மேலே செல்லும் உயர் மின் அழுத்த கம்பியினால் மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இவரது உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.காணா விளக்கு போலீஸார்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Tags :