ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

by Staff / 31-05-2024 04:30:13pm
ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் கோடை மழை குறைந்து மீண்டும் வெப்ப நிலை அதிகரித்ததன் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories