வாட்ஸ்அப்பில் செம அப்டேட் விரைவில் ..

by Editor / 27-04-2023 09:44:33am
வாட்ஸ்அப்பில் செம அப்டேட் விரைவில் ..

வாட்ஸ்அப் குறித்த அற்புதமான புதியஅப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த அவ்வபோது பல அப்டேட்கள் வருகின்றன. அந்த வரிசையில் ஒரே போன் நம்பரை வைத்து, 4 போன்களில் வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு போன்களிலும் வாட்ஸ்அப் தனித்தனியே இயங்கும். பிரைமரி மொபைல் போனை தொடர்ந்து 14 நாட்கள் பயன்படுத்தாவிட்டால், மற்ற போன்களிலிருந்து வாட்ஸ்அப் தானான லாக்அவுட் ஆகிவிடும். இந்த புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo