கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளுடன் ஒரு நேர உணவுக்கு தவிக்கும் 85 வயது மூதாட்டி-
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கோகுலம் தெருவில் வசித்து வரும் மூதாட்டி உச்சிமாகாளி (85). இவரது கணவர் இறந்த நிலையில் மகள் மாரியம்மாள்(47) கண்பார்வை குறைபாடு ஏற்பட்ட நிலையில் சிறிது மனநலம் பாதிப்பு ஆளாகியதால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதனால், அவர் அவரது பெற்றோர்களுடன் வாழ்ந்துவருகிறார்.
இந்த நிலையில் தாய் உச்சிமாகாளிக்கு வயது முதிர்வு காரணமாக கூலிக்கு வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கிய நிலையில் இவர்களது வாழ்க்கை கேள்விகுறியாகியது. மூதாட்டிக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையில் தூரத்து உறவினர் கொஞ்சமாக இடம் கொடுத்ததாகவும் அதில் இருவரும் வாழ்ந்துவரும் நிலையில் அந்த இடத்தையும் அதையும் காலி செய்ய உறவினர்கள் வற்புறுத்தி வருவதாகவும் ஒருவேளை உணவுக்காக எதிர்பார்த்து காத்து நிற்பதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவிகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளியான ராமராஜ் கூறும்போது, ‘மூதாட்டியான உச்சிமாகாளிக்கு உறவினர்கள் யாரும் கிடையாது எனவும் மேலும் அவரது மகள் மாரியம்மாள் உடன் இடிந்து விழும் தருவாயில் உள்ள வீட்டில் ஒரு வேளை உணவுக்காக கூட அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்ந்து வருவதாகவும் தன்னால் முடிந்த வரை உதவி செய்து வருவதாகவும் தெரிக்கிறார் அவர்.
மேலும் தமிழக அரசோ, தென்காசி மாவட்ட நிர்வாகமோ தலையிட்டு மூதாட்டிக்கு உதவி செய்திட வேண்டும் எனவும் கண்பார்வையற்ற மகளுக்கு மருத்துவரின் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை வழங்கிடவும் இதுவரை இந்த இருவரும் ரேஷன் அட்டை கூட பெறாத நிலையில் இவர்கள் வசித்து வருவதாகவும், அரசு குடும்ப அட்டை வழங்கிடவும் முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்.
85 வயதைக் கடந்தாலும் பெற்ற மகளை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டுவரும் இவரைப்போன்ற தாய்மார்கள் வாழ்வதால்தான் இன்னமும் இந்த உலகம் மனித நேயத்தோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறது.
Tags : 85-year-old grandmother suffers from one meal a day with her visually impaired daughter-