பெருவில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு இடையே மோதல் 14 பேர் பலி
தென்னமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பரவெளியில் உள்ள சுரங்கத்தில் முறைசாரா தொழிலாளர் களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :