ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வும், தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, ஈரோட்டில் இருந்து நேற்று இரவு அவர் சென்னை திரும்பியுள்ளார். இரவில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
Tags :