குற்றப் பின்னணி உள்ளவர்கள் இபிஎஸ் உடன் புகைப்படம் எடுக்கக் கூடாது

by Editor / 28-06-2025 02:39:55pm
குற்றப் பின்னணி உள்ளவர்கள் இபிஎஸ் உடன் புகைப்படம் எடுக்கக் கூடாது

விஐபிக்கள், நடிகர், நடிகைகளுக்கு கொக்கைன் சப்ளை செய்தது குறித்து அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் இபிஎஸ் உடன் புகைப்படம் எடுக்கக் கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பொதுமக்களை சந்திக்க இபிஎஸ் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via