தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபை கூட்டங்கள் ரத்து

by Editor / 30-04-2021 06:06:48pm
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபை கூட்டங்கள் ரத்துதமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 
இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே 1ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via