‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் கைது

by Editor / 30-04-2021 05:54:13pm
 ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் கைது


 

திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் ரெம்டெசிவிர்’ மருந்தைகள்ளச்சந்தையில் வாங்கி, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
அவரிடம் இருந்து சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டரான முகமது இம்ரான்கான்( 26) என்பவர் 4 ஆயிரத்து 700 ரூபாய் மருந்தை ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்று வந்தார். அவருடைய நண்பரான விஜய்(27) என்பவரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார்.இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி. சாந்திக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது டாக்டர் முகமது இம்ரான்கானை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை, கள்ளச்சந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார். உடந்தையாக இருந்த நண்பர் விஜயும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

 

Tags :

Share via

More stories