11-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

by Editor / 20-12-2021 02:56:23pm
11-ம் வகுப்பு மாணவி தற்கொலை  வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் மாணவி மனமுடைந்து எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.அந்த கடிதத்தில் 
 உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான். என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுஇருந்தது.இந்தநிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்ற நிலையில்  தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை.பல்வேறுந் கட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் மாணவியின்  அலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர்.இதில் கல்லூரி மாணவர் விக்னேஷ் .மாணவியிடம் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 

 

Tags :

Share via

More stories