ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ....

by Admin / 29-03-2023 09:28:41am
 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ....

ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டைட்டன்ஸ் அணியும் போட்டிகளில் களமிறங்க உள்ளன உலக வீரர்களை உள்ளடக்கிய இந்த ஐபிஎல் போட்டியானது இந்திய ரசிகர்களிடம் எப்பொழுதும் மிகுந்த வரவேற்பைப் பெறும் பெற்றுக் கொண்டிருக்கிறது.  .இது மாநிலங்களை தழுவிய-  உள்ளடக்கிய அணியாக  இந்தியாவில் உள்ள, உலகத்தில் உள்ள, அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுத்து போட்டிகள் நடத்தப்படுவதால் , நாடுகளுக்காக விளையாடியவர்களும் இந்தியாவிற்காக விளையாடியவர்களும், தனித்தனி அணியாக நின்று  விளையாடுவதின் காரணமாக, ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த ஐபிஎல் தொடரை விரும்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் .நாளை நடக்கக்கூடிய இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி வெற்றி பெறுவதற்கு  47 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகவும் டைட்டன்அணி  வெற்றி  பெறுவதற்கு  53 விழுக்காடு வாய்ப்புள்ளதாகும் கணிக்கப்பட்டிருக்கிறது   சென்னை சூப்பர் கிங்ஸ்அணியில் இருக்கும்  டோனியின்  விளையாட்டை அவருடைய ரசிகர்கள் காணுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர் . இந்திய கிரிக்கெட்டில், விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்ற டோனியின் விளையாட்டை கண்டு ரசிப்பதிலே மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருக்கும் ரசிகர்கள் நாளை நடக்கக்கூடிய போட்டிக்காக காத்திருக்கிறார்கள்

 

Tags :

Share via