திருப்பூரில் கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த தந்தை கைது

by Editor / 04-07-2022 02:02:34pm
திருப்பூரில் கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த தந்தை கைது


திருப்பூர் அருகே  ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். முதலிபாளையம் சிட்கோ  பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த இருபத்தி எட்டாம் தேதி நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் .இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பாலசுப்பிரமணியத்தின் தந்தை உள்பட 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் பாலசுப்பிரமணியம் மதுவுக்கு அடிமையாகி பணத்தை கண்டபடி செலவு செய்ததால் மக்களுக்கு சொத்து எதுவும் இருக்காது என்று கருதி தந்தை அப்புக்குட்டி  கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories