ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்து தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்பின் உச்சத்திலிருந்த மகாராஷ்ட்ரா சட்டசபை வாக்கெடுப்பு இன்று நடந்தது .144 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் வெற்றி என்கிற நிலையில் 164 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்துஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்து தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.சிவசேனாவிலிருந்து அதிருப்தியுடன் வெளியேறிய ஷிண்டே தம் பலத்தை நிருபித்து வெற்றியை தனக்கானதாக்கிக் கொண்டார். சாதாரண ஆட்டோ தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஷிண்டே பால் தாக்கரே மீது கொண்ட ஆழ்ந்த பற்றின் காரணமாக சிவசேனாவில் இணைந்து வட்ட செயலாளர். கவுன்சிலர், எம்.எல்.ஏ,அமைச்சர்,துணை முதலமைச்சர் எனபடிப்படியாக உயர்ந்துஇப்பொழுது பெரும்பான்மை பலத்துடன் தன் ஆட்சியை நிருவிவுள்ளார்.சிவசேனாவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டதால் அவர் சுயேச்சையான அரசாக இருப்ார்
Tags :