ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் அறிமுகம்.

by Editor / 06-04-2023 07:57:13pm
ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் அறிமுகம்.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பல்வேறு சுற்றுலாக்களை வெற்றிகரமாக இயக்கி வருகிறது. பாரத தரிசன சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி கல்லூரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது.

ஐ.ஆர்.சி.டிசியானது சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 04 குளிர்சாதன பெட்டிகள், 07 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரி கார், 02 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், IRCTC, தென் மண்டலம்/சென்னை சார்பில் “புன்னிய தீர்த்த யாத்திரை” - என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இதன் உள்ளடக்கம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம் தொடங்கும் தேதி : 04.05.2023

நாட்கள் : 11 நாட்கள்/10 இரவுகள்

பார்வையிடும் இடங்கள்: பூரி - கோனார்க் - கொல்கத்தா - கயா - வாரணாசி - அயோத்தி – திரிவேணி சங்கமம்

கட்டணம்:

1. SL class: Rs.20,367/-

2. 3AC class: Rs.35,651/-

பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்கள்:

1. 3AC வகுப்பு/SL வகுப்பில் ரயில் பயணம்

2. AC/NAC தங்குமிடம்

3. உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து

4. தென்னிந்திய உணவு

5. சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி

இரயில் வழித்தடம் : கொச்சுவேலியிலிருந்து புறப்பட்டு கொல்லம் புனலூர் வழியாக செங்கோட்டை வந்து  மதுரை வழியாக திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மயிலாடுதுறை, சிதம்பரம் , கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் , சென்னை வழியாக செல்கிறது. மக்கள் அனைவரும் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஐ.ஆர்.சி.டி.சிஉடன்பாதுகாப்பாகபயணம்செய்துஎல்.டி.சி(LTC) நன்மைகளைப் பெறுங்கள்.

மேலும் விவரங்களுக்கு

திருச்சி : 8287932070 

மதுரை : 8287931977, 8287932122,

கோயம்புத்தூர் : 9003140655.

 

Tags :

Share via