சிலவரி செய்திகள்

by Editor / 27-11-2021 09:50:17pm
சிலவரி செய்திகள்

கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ₹37,000-லிருந்து, ₹60,000-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


வட இந்திய மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து டிசம்பர் மாத ஆரம்பத்திலேயே தொடங்கும் என்றும் இதன் காரணமாக வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு குழந்தைகள் செல்ல ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை தேவை இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.


சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல்வர் நேரில் ஆய்வு.


நெல்லை மாவட்டம்வள்ளியூர் அருகே சீலாத்திகுளத்தில் மாரிகிருஷ்ணன் வயது(3)மின்சாரம் தாக்கி உயிரிழப்பு  ராதாபுரம் போலிசார் விசாரணை.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே  மிட்டாதார்குளத்தில் டேவிட் ராஜா என்பவர் அடித்துக் கொலை திசையன்விளைபோலிசார் விசாரணை.

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எதிரொலி.

தனியார் பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜ்,கராத்தே மாஸ்டர் ராஜா போஸ்கோ சட்டத்தின்கீழ்  கைது.

 

Tags :

Share via