1 கோடி பணம் கேட்டு ஆள் கடத்தல் 3 பேரிடம் போலீசார் விசாரணை.

by Editor / 28-08-2024 10:46:05am
1 கோடி பணம் கேட்டு ஆள் கடத்தல் 3 பேரிடம் போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பிரபல சன் பீடி கம்பெனி உரிமையாளர் மகன் தியாகராஜன் (42) என்பவரை கடந்த 23 ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு அவருடைய குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர். 12 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை மீட்கப்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர் அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் உட்பட 3 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து கந்திலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 1 கோடி பணம் கேட்டு ஆள் கடத்தல் 3 பேரிடம் போலீசார் விசாரணை.

Share via