குழந்தைகளோடு தீக்குளித்த பெண் மகளுடன் பலி.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள தெருவில் வசித்து வருபவர் சுப்ரமணியன் மகன் ராமகிருஷ்ணன் இவர் செங்கோட்டை அருகில் உள்ள தேன் பொத்தையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினுடைய கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கும் ஆய்க்குடியைச் சார்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஏழு வயதில் சுஜிதா என்கின்ற மகளும் நான்கு வயதில் கீர்த்தனா என்கின்ற மகளும் உள்ளனர் இதில் சுஜிதா இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் கீர்த்தனா அங்கன்வாடி பள்ளியில் படித்து வருகிறார் இந்த நிலையில் கணவர் வீட்டில் அவசர தேவைகளுக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து மகேஸ்வரி செலவு செய்ததாக கூறப்படுகிறது மேலும் சிலருக்கு கடன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பணத்தை மனைவியிடம் கேட்கவே கணவன் மனைவிக்கு இடையே சில தினங்களுக்கு முன்பு சண்டை ஏற்படவே மகேஸ்வரி கோபித்துக் கொண்டு தன் மகள்களை கூட்டிக்கொண்டு ஆய்க்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார் இந்த நிலையில் உறவினர்கள் நேற்று 27 ஆம் தேதி அவரை கூட்டி வந்து வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளனர்.
மேலும் அந்தப் பகுதியில் அவர்கள் கோவில் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று காலை கணவன் ராமகிருஷ்ணனுக்கு உணவாக்கி கொடுத்த மகேஸ்வரி மாமனார் எல்லோருக்கும் உணவளித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் இந்த நிலையில் திடீரென மகேஸ்வரி கதவை பூட்டிக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் தீ வைத்துள்ளார் இதில் மகேஸ்வரி 7 வயது மகள் சுஜிதாவும் சம்பவ இடத்திலேயே கருகி பலியாகிநர் கீர்த்தனா மட்டும் அதிர்ஷ்டவசமாக 10 சதவீத காயங்களுடன் உயிர் தப்பினார் இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இலத்தூர் போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த மகேஸ்வரி மற்றும் சுஜிதா உடலை உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சிறு காயங்களுடன் இருந்த கீர்த்தனாவும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :