உலகக் கோப்பைக்கு சீனாவின் பரிசு

by Staff / 20-10-2022 12:56:08pm
உலகக் கோப்பைக்கு சீனாவின் பரிசு

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சீன ராட்சத பாண்டாக்கள் இறுதியாக கத்தாரை வந்தடைந்தன. இதன் மூலம், மேற்கு ஆசியாவில் பாண்டாக்களைப் பெறும் முதல் நாடு கத்தார் ஆனது. உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் கத்தாருக்கு சீன மக்கள் பரிசாக இரண்டு பாண்டாக்கள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன. சுஹைல் மற்றும் சோரயா என்ற பாண்டாக்கள் அல்கோர் பூங்காவில் ஆடம்பர குளிரூட்டப்பட்ட கூடாரத்தில் விடப்பட்டுள்ளன.

சுஹைல் என்ற ஆண் பாண்டாவுக்கு நான்கு வயதும், சோரயா என்ற பெண் பாண்டாவுக்கு மூன்று வயதும் ஆகிறது. அல்கோர் பூங்கா கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைக்கான பரிசாக சீன அரசாங்கம் பாண்டாக்களை கத்தாருக்கு அனுப்பியது. சீனா உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. அதே நேரத்தில், கத்தார் வழங்கும் இயற்கை எரிவாயுவின் முக்கிய நுகர்வோர் சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் பாண்டா 130 கிலோ எடையும், பெண் பாண்டா 70 கிலோ எடையும் கொண்டது. அல்கோர் பார்க் இயக்குனர் டிம் போட்ஸ் கூறுகையில், பாண்டாக்கள் 21 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் இருக்கும். அவை சில வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்குள் பொதுமக்களுக்கு காட்டப்படும். இங்கு இரண்டு பாண்டாக்களுக்கும் தனித்தனி கூடாரம் தயார் செய்யப்பட்டுள்ளது.சீனா மற்றும் தைவானுக்கு வெளியே பாண்டாக்களைப் பெறும் 20வது நாடு கத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via