முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உண்டியல் வசூல்... 3 கோடியே 50 லட்சத்து 34.ஆயிரத்து.114
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். 12 நாட்கள் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர். பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது. 11-ம் திருநாள் அன்று ஏராளமான உண்டியல்கள் நிறைந்துவிட்டது.இதனைத் தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. மொத்தம் 69 உண்டியல்களை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அலுவலர்கள் மேற்பார்வையில் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூபாய் 3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114 இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :