கொலையில் முடிந்த சந்தேகம்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகிலுள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியைசேர்ந்த முத்துப்பாண்டி (38) - முத்துக்குமாரி (28) தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வேறு ஆணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் அவருடன் முத்துக்குமாரி சென்றார். பின்னர் மீண்டும் கணவரிடம் திரும்பினார். ஆனாலும் முத்துக்குமாரியின் நடத்தை மீது முத்துப்பாண்டிக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதுதொடர்பான சண்டையில் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற அவர் போலீசாரிடம் தற்கொலை நாடகம் ஆடினார். விசாரணையில் குட்டு வெளியானதால் முத்துப்பாண்டியை போலீஸ் கைது செய்தது.
Tags : கொலையில் முடிந்த சந்தேகம்.