புதிய தோற்றத்தில் பார்பி பொம்மைகள்... முன்கள பணியாளர்களை கவுரவப்படுத்த தயாரிப்பு...

by Admin / 05-08-2021 03:57:56pm
புதிய தோற்றத்தில் பார்பி பொம்மைகள்... முன்கள பணியாளர்களை கவுரவப்படுத்த தயாரிப்பு...



கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்திக்கு ஊன்றுகோலாக இருந்த  முன்களப்பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 
உலக முழுவதும் கொரோனா பரவியபோது, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக செயல்பட்டு, பல உயிர்களை காப்பாற்றியிருந்தனர். அதுமட்டுமல்லாது தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் பல நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்த உதவி வருகின்றன.

இந்த நிலையில் முன்களப்பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பார்பி பொன்மை தயாரிப்பு நிறுவனம் அவர்களது உருவங்கள் கொண்ட 6 பொம்மைகளை உருவாக்கியுள்ளது.
 
அதில் கோவிஷீல்டு தயாரிப்புக்கு உதவிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட்டின் உருவ பொம்மையும் இடம்பெற்றுள்ளது.

இது சிறுவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்ட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories