அமைச்சர் உதயநிதியை பாராட்டிய நடிகர் ஆர்யா!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அத்லெடிக் பிரீமியர் லீக் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், நடிகர் ஆர்யா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நான் பிடித்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் அது ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள் தான். எந்த விளையாட்டாக இருந்தாலும் அத்லெட்டிக்ஸ் தான் அடித்தளம். உதயநிதி அமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வகையில் ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதிக்கு எனது பாராட்டுகள் எனது ஆதரவு எப்போதும் இருக்கும்” என்றார்.
Tags :