by Staff /
09-07-2023
12:43:10pm
உத்தரப்பிரதேசம் ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு ஆணும் பெண்ணும் வந்த பைக் மீது லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை அவ்வழியாக வந்த பெண்கள் பார்த்து பதறியடித்து காப்பாற்ற முயன்றனர். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி அவர்கள் மீது மோதி இரண்டு பெண்களும் சாலையில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags :
Share via