காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி

by Staff / 22-09-2023 03:09:27pm
காட்டு யானை  தாக்கியதில் விவசாயி பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமானமான யானைகள் உள்ளன. யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்றும் தேதப்படுத்தியும் செல்வது வழக்கம்.இந்த நிலையில் சத்தியமங்கலம், வனச்சரகம், சிக்கரசம்பாளையம் அருகே உள்ள அட்ட மொக்கை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (63) விவசாயி. தோட்டத்தில் இருந்த நாய் கத்தி கொண்டே இருந்துள்ளது. நாய் கத்துவதை அறிந்த விவசாயி எதற்காக நாய் விடாமல் குரைக்கிறது என பார்ப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.அப்போது திடீரென புதர் மறைவில் இருந்து வெளியே வந்த ஒரு காட்டு யானை விவசாயி ராமசாமியை ஆவேசமாக தாக்கியதில் விவசாயி யானையிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை யானை தாக்கி கொன்றது. இது பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். யானை தாக்கி பலியான ராமசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி உயிரிழந்த ராமசாமி குடும்பத்தாரிடம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவுபடி முதற்கட்ட நிவாரண நிதியாக ரூபாய் 50, 000 த்தை சத்தி ரேஞ்சர் பழனிச்சாமி வழங்கினார்.

 

Tags :

Share via