திமுக நகர்மன்றத்தலைவருக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள். 

by Staff / 18-08-2025 10:12:42pm
திமுக நகர்மன்றத்தலைவருக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30-வார்டு பகுதிகளை கொண்டதாகும். இந்த நிலையில் இதற்கு முன்பாக இருந்த திமுக நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது கடந்த ஜூலை 17ம் தேதி கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார். இந்த நிலையில் புதிய நகர்மன்ற தலைவருக்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு மேல் நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.

இதில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக தரப்பிலிருந்து 6-வது வார்டு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா வெங்கடேஷ் மற்றும்  அதிமுக தரப்பில் இருந்து 26-வது வார்டு கவுன்சிலர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டனர்.
 28 கவுன்சிலர்கள் வருகை தந்து வருகை பதிப்பு பதிவேட்டில் கையெழுத்திட்டு வாக்களித்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கௌசல்யா 22 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

இதனை அடுத்து வெளியே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழுக கரகாட்டம், ஒயிலாட்டம், குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் முன்னாள் திமுக நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது 28 கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் அவர் பதவியிலந்த நிலையில்  மீண்டும் மற்றொரு திமுக நகர்மன்ற தலைவர் வெற்றி பெற்றார்என்பது குறிப்பிடத்தக்கது.திமுகவை ஜென்ம எதிரியாக பாவித்து அக்கட்சியின்  பொது செயலாளர் மக்களைக்காப்போம் தமிழகத்தை மீட்போம்  முழக்கத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் நிலையில் அதிமுகவினர் திமுகவினருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் 6பேர் மாற்றி வாக்களித்து  அதிமுக வேட்பாளரை தோற்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : திமுக நகர்மன்றத்தலைவருக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள். 

Share via