வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: சத்யபிரதா சாகு

by Staff / 27-10-2023 12:05:39pm
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் 18 வயது நிரம்பியதும் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் உதவிக்கான மொபைல் செயலி மூலம் தங்கள் பெயர்களை சேர்க்க வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories