உலகளவில் 40 லட்சம் பேர், இந்தியாவில் 4 லட்சம் பேர் பலி

by Editor / 06-07-2021 09:28:39am
 உலகளவில் 40 லட்சம் பேர், இந்தியாவில் 4 லட்சம் பேர் பலி

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிய நிலையில், பெரும்பாலான நாடுகள் தற்போது தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது.

தொற்று பாதிப்பைத் தடுக்க அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,45,98,361 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 6,21,335 -ஆக உள்ளதுஇந்தியாவில் கரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,06,18,939 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 4,03,310 -ஆக உள்ளது.

இதேபோல் பிரேசில், பிரான்ஸ், துருக்‍கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via