குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்.

by Staff / 07-06-2025 10:42:41am
 குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்.

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இன்றைய தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியலிட்டுவரும் நிலையில், விடுமுறை தினத்தை கொண்டாட குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிந்து வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்.

Share via