கடையநல்லூர் நகராட்சியில்திமுக செய்யும் ஊழலை திமுகவே எதிர்க்கும் வினோதம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நகராட்சியில் நடைபெறும் லஞ்ச லாவண்ய திருவிளையாடல்கள் குறித்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் மோதிக் கொள்ளும் விவகாரம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே மட்டுமின்றி பொது மக்களிடையேயும் ஒருவித கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது..
தமிழகத்தின் உள்ள உள்ளாட்சிகளில் நல்லாட்சிகள் அமைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சலாவண்ய ங்களும் கொடி கட்டி பறந்து வருவதும் உண்மை..
அந்த வகையில் மாநில அரசு லஞ்சலாவணய ஊழலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மத்திய அரசு தன் நிர்வாகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் மக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டுள்ளதை கண்டுபிடித்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது இது ஒருபுறம் இருக்க தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் ஊழலை எதிர்த்து துணைத்தலைவரும் ஊழல் இல்லாமல் நிர்வாகம் இல்லை என தலைவரும் அதிகாரிகளும் ஒருவருக்கு கொருவர் உச்சிப்புடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் மோதலின் உச்சகட்டம் கண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே மற்றுமின்றி பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக கடையநல்லூர் நகரத்தின் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் தரம் இல்லாத திட்டப்பணிகள் அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு தாராளமாகமக்கள் பணம் வாரிஇறைப்பு குறிப்பாக குடிக்கின்ற குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் கூட நகராட்சி நிர்வாக அதிகாரிகளும் நகரமன்ற தலைவர் தலைமையிலான குழுக்களும் ஊழல் பணத்தில் செழுமையுடன் மிதந்து வருகின்றனர் .. கடையநல்லூர் நகராட்சி நிர்வாக நிர்வாகத்தில் நடைபெறும் லஞ்சலாவணிய அத்துமீறல்கள் குறித்து கடையநல்லூர் நகராட்சி துணைத் தலைவர் ராசையா( திமுக) தொடர்ந்து தமிழக முதல்வருக்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் பல்வேறு புகார்களை உரிய ஆவணங்களுடனும் சாட்சியங்களுடனும் புகார் தெரிவித்தாலும் ஏனோ? இந்த கடந்த நான்காண்டுகளில் கடையநல்லூர் நகர சபை தலைவர் மீதோ? நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மீதோ? எந்தவித நடவடிக்கையும் எடுக்க அரசு முனைப்பு காட்டவில்லை திமுக தலைமையிலான ஆட்சியில் திமுக செய்கின்ற தவறுகளை அதே திமுக கட்சியை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் எடுத்துரைக்கும் நியாயமான புகார் விவகாரம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றாலும் ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது. கிட்டத்தட்ட கடையநல்லூரில் பணியாற்றிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமின்றி அவர்கள் செய்யும் தவறுகளை திட்ட முறைகேடுகளை அப்படியே நகர்மன்றத்தில் பிரதிவாதங்கள் கூட செய்யாமல் அங்கீகரித்து கூட்டு சதி செய்து மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்து வருவதற்கு திமுக கவுன்சிலர்களிடையே பெரும் கண்டனமும் எழுந்துள்ளது. மொத்தத்தில் கடையநல்லூர் நகர சபையில் கொடி கட்டி பறக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த அரசும் லஞ்ச ஒழிப்பு துறையும் முன்வராத பட்சத்தில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் நிச்சயம் மக்கள் திமுகவிற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றே தெரிகிறது.
Tags : கடையநல்லூர் நகராட்சியில்திமுக செய்யும் ஊழலை திமுகவே எதிர்க்கும் வினோதம்.



















