பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஒன்று கூடி சிறப்பு தொழுகை.

by Staff / 07-06-2025 11:01:30am
பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஒன்று கூடி சிறப்பு தொழுகை.

இறைவனின் தூதர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் பக்ரீத் பெருநாளானது உலகம் முழுவதும் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்பட்ட வரும் நிலையில், அன்றைய தினம் ஏழை, எளிய மக்களுக்கு மாமிச உணவுகளை விருந்தளித்து பக்ரீத் பண்டிகையையானது வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

 அந்த வகையில், இன்றைய தினம் நாடும் முழுவதும் இஸ்லாமிய பெருமக்களால் பக்ரீத் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து, நறுமணப் பொருட்களை இட்டு இஸ்லாமிய பெருமக்கள் கூட்டு தொழுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், நாடுமுழுவதும்  ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் ஒன்று கூடி சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் ஒன்று கூடி தற்போது கூட்டு தொழுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், தொழுகைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

 பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஒன்று கூடி சிறப்பு தொழுகை - 

Share via