மாமனார் அவதூறாக பேசியதால் பெண் இரண்டு குழந்தைகளோடு தற்கொலை முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மனைவி முத்துமாரி இவர்களுக்கு விக்னேஷ் 6 மற்றும் விஸ்வேஸ் 2 வயதில் இரண்டு ஆண் குழந்தை உள்ளது.பழனிவேல் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்
இவரது தந்தை முத்து விஜயன் மருமகள் முத்துமாரியிடம் தனது மகனின் ஜாதகத்தை கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது அப்போது மருமகளை மாமனார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது
இதனால் மனம் தளர்ந்த முத்துமாரி தனது 2 குழந்தைகளுடன் இரவில் கீழத்தூவல் கிராமத்தில் ஊரணியில் நிரம்பிய தண்ணீரில் தனது இரண்டு குழந்தைகளையும் மூழ்கடித்து தற்கொலைக்கு முயற்சித்த அந்தப்பெண்ணை கீழத்தூவல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண் மற்றும் இரு குழந்தைகளை பத்திரமாக மீட்ட அவர் அந்த பெண்ணை நலம் விசாரித்து அறிவுரை புத்திமதி கூறி காப்பாற்றிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெண் ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Tags :