சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டத்தில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார். கும்பகோணம் அடுத்த தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜி வந்துள்ளார். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த சிறுவன் ஒருவன் ஆசிரியர் மீது மோதியுள்ளார். இதில் ஆசிரியர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக கூறப்படுகிறது .இளம்பருவத்தினர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது என காவல்துறை எச்சரித்த பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன என வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags :



















