டிஜிட்டல் கரன்சி பிட் காயின் மதிப்பு 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

by Staff / 16-06-2022 12:21:23pm
டிஜிட்டல் கரன்சி  பிட் காயின் மதிப்பு 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி


டிஜிட்டல் கரன்சி என பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்ததால் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிக சதவீதம் உயர்த்தும் என்று எதிர்பார்ப்பு காரணமாக பங்குச் சந்தையை போல் கிரிப்டோகரன்சி சந்தையும் இறக்கும்முகமாக உள்ளது.பிட்காயின் முதலீடு செய்தவர்கள் பீதியில் அதனை விற்று வருவதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபத்தி எட்டு சதவீதம் விலை குறைந்துள்ளது கடந்த நவம்பர் மாதம் 69 ஆயிரம் அமெரிக்கா டாலர் என்ற உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு சுமார் 70 சதவீதம் குறைந்து 22 ஆயிரம் டாலருக்கு கீழ் சரிந்துள்ளது.

 

Tags :

Share via