வரலாற்றில் இன்று

by Editor / 01-03-2022 06:46:42am
வரலாற்றில் இன்று

1498 : வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வழி கண்டுபிடிக்கப் புறப்பட்டார்.

1562 : பிரான்ஸில் மதப்போர் ஏற்பட்டதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1565 : ரியோ டி ஜெனிரோ நகரம் நிறுவப்பட்டது.

1700 : ஸ்வீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

1790 : அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆரம்பமானது.

1867 : நெப்ரஸ்கா அமெரிக்காவின் 37 வது மாநிலமானது.

1872 : அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் பூங்கா உலகின் முதலாவது தேசியப் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது.

1873 : முதலாவது வர்த்தக டைப்ரைட்டர் மிஷினை ரெமிங்டன் சகோதரர்கள் நியூயார்க்கில் தயாரித்தனர்.

1893 : அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் வானொலியின் பயன்பாடு பற்றி நிக்கோலா டெஸ்லா பொது மக்களுக்கு உரையாற்றினார்.

1896 : எத்தியோப்பிய  ராணுவத்தினர் இத்தாலிப் படைகளைத் தோற்கடித்தனர். 
முதலாவது இத்தாலி- எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.
ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

1899 : இலங்கையில் குற்றவியல் தண்டனை சட்டவிதித் தொகுப்பு நடைமுறைக்கு வந்தது.

1901 : இலங்கையின் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1910 : வாஷிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் ரயில் ஒன்று 
புதைந்ததில் 96 பேர் உயிரிழந்தனர்.

1912 : முதன்முதலில் பறக்கும் விமானத்தில் இருந்து ஆல்பர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.

1919 : ஜப்பான் ஆட்சியின் கீழ் கொரியாவில் மார்ச்-1 இயக்கம் தொடங்கப்பட்டது.

1920 : ஆஸ்திரியாவில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டது.

1936 : அமெரிக்காவின் ஹூவர் டேம் கட்டி முடிக்கப்பட்டது.

1939 : ஜப்பான், ஒசாக்காவில் ராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் உயிரிழந்தனர்.

1942 : இரண்டாம் உலகப் போர் :- ஜப்பான் படையினர் ஜாவாத் தீவில் இறங்கினர்.

1943 : இரண்டாம் உலகப்போர் :- பிஸ்மார்க் கடல் போர் ஆரம்பமானது.

1946 : இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.

1956 : கிழக்கு ஜெர்மனியின் தேசிய மக்கள் ராணுவம் அமைக்கப்பட்டது.

1961 : உகாண்டாவில் முதல் முறை தேர்தல் நடைபெற்றது.

1966 : சோவியத்தின் வெனீரா -3 விண்கலம் வெள்ளிக் கோளில் மோதியது.

1975 : ஆஸ்திரேலியாவில் வண்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1977 : சுவிட்சர்லாந்தில் சார்லி சாப்ளினின் உடல் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

1991 : ஈராக்கில் சதாம் உசேனுக்கு எதிராக கிளர்ச்சிகள் ஆரம்பமானது.

1995 : யாஹூ இணைய சேவை கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

2002 : ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2003 : அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஹாக்கில் நடத்தியது.

2006 : ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது.
 

 

Tags :

Share via