(01-03-2022) ராசி பலன்கள்
(01-03-2022) ராசி பலன்கள்
மேஷம்
மார்ச் 01, 2022
அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : லாபகரமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 01, 2022
வியாபார பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். வாழ்க்கை துணைவர் வழியில் உதவி கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரோகிணி : உயர்வு உண்டாகும்.
மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 01, 2022
உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.
---------------------------------------
கடகம்
மார்ச் 01, 2022
வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய முடிவு காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : விரயம் உண்டாகும்.
ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 01, 2022
சமூகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பயணம் தொடர்பான எண்ணம் கைகூடும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரம் : எண்ணம் கைகூடும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 01, 2022
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். கனிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : உதவி கிடைக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 01, 2022
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் நிர்வாகத்திறமை வெளிப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
சித்திரை : திறமைகளை அறிவீர்கள்.
சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 01, 2022
புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
---------------------------------------
தனுசு
மார்ச் 01, 2022
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் படிப்படியாக குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி கற்கும் நிலைகளில் மாற்றம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : திருப்தியான நாள்.
---------------------------------------
மகரம்
மார்ச் 01, 2022
உயர்நிலை கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனை மற்றும் கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் அன்பை பெறுவீர்கள். தைரியம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : கலகலப்பான நாள்.
அவிட்டம் : அன்பு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 01, 2022
மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சதயம் : அனுபவம் உண்டாகும்.
பூரட்டாதி : குழப்பம் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
மார்ச் 01, 2022
வாக்கு சாதுரியத்தின் மூலம் மேன்மை அடைவீர்கள். விவேகமான சிந்தனைகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
Tags :