திருப்பூரில் இன்று தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தொழில்முனைவோர்மாநாடு-

by Editor / 25-08-2022 08:55:54am
திருப்பூரில் இன்று  தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தொழில்முனைவோர்மாநாடு-

திருப்பூரில் இன்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில்  திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழாவில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி, சொலவம்பாளையம் தனியார் தொழிற்பேட்டை, அரியாகவுண்டன்பட்டி வெள்ளி கொலுசு பொது வசதி மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் நலத்திட்டங்களை வழங்கிய பின் முதலமைச்சர் பேரூரை ஆற்றுகிறார். 

 

Tags :

Share via

More stories