வனப்பகுதியில் மனித எலும்பு கூடுகள்

தீவட்டிப்பட்டி அருகே கோவில்பாடி மலை கிராமத்தில் இருந்து வனப்பகுதிக்கு செல்லும் ரோட்டில் பாப்பிரெட்டிப்பட்டி வனசரகம் எரிமலை காப்புக்காடு வனவர் ஜெயராமன், வனக்காப்பாளர் வேணு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.கோவில்பாடி வனப்பகுதியில் வடக்கு நோக்கி 2 km தூரத்தில் மரத்தில் கயிறு தொங்கிய நிலையில் மரத்தின் கீழே மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடந்தது. அதன் அருகில் லோயர்- டி சர்ட் கிடந்துள்ளது. இதுதொடர்பாக கோவில்பாடி மலைகிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.மனித எலும்புக்கூடு தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசில் வனவர் ஜெயராமன் புகார் அளித்ததின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எலும்பு கூடாக கிடந்தது கோவில்பட்டி மலை கிராமத்தை சேர்ந்த முத்து மகன் குமார் (35) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை எனவும், குடும்பத்தினர் அவரை தேடி வந்ததும் தெரிய வந்தது. இருந்தாலும் குமார் எப்படி இறந்தார் இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
Tags :