பசி பட்டினி இலவச கோதுமை மாவு விநியோக நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஏழைகளுக்கு இலவச கோதுமை மாவு விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மூன்று பேர் இறந்தனர். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களாக எரிவாயு சிலிண்டர், பால், உணவு தானியங்களின் விலை அதிகரித்து, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Tags : The situation in Pakistan is getting worse day by day.