ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை:  - நான்காவது இடத்தில் கோலி

by Editor / 24-07-2021 08:23:45pm
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை:  - நான்காவது இடத்தில் கோலி

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் அவர்.


மொத்தம் 901 புள்ளிகளை பெற்று அவர் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அண்மையில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 812 புள்ளிகளை பெற்றுள்ளார், ரோகித் ஷர்மா 759 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். மற்றொரு வீரர் ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி ஏழாவது இடத்தில் உள்ளார்..

 

Tags :

Share via

More stories

Logo