ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு வினாடிக்கு 170000 கனியாக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 170000 கனஅடியாக அதிகரித்துள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 18-வது நாளாக தடை நீடிக்கிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு வினாடிக்கு 170000 கனியாக அதிகரிப்பு