திமுக கைக்கூலியாக ஓ.பன்னீர் செல்வம் செயல்பாடுவதாக நத்தம் விஸ்வநாதன்-குற்றச்சாட்டு

கொடைக்கானலில் நடைபெற்ற அதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு.ஓ.பன்னீர் செல்வம் திமுக ஆட்சி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை சட்டமன்றத்தில் பாடி வருகிறார்,இதற்கு ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் சேர்ந்துகொள்ளலாம்.அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தியதாக குற்றம் சாட்டினார்.மேலும் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றால்,இந்த பொறுப்பில் யாரையும் அமரவிடமாட்டேன் என்று ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார்.திமுக கைக்கூலியாக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு கட்சியை காட்டிக்கொடுத்து துரோக செயல்களில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து வருத்தத்துடன் நீக்கப்பட்டதாக நத்தம் விஸ்வநாதன் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச்சு.
Tags : Natham Viswanathan accused O. Panneer Selvam of working as a DMK stooge.